டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது


டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது
x

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

கத்தியை காட்டி...

அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன்(வயது 57). டாஸ்மாக் ஊழியரான இவர் நேற்று மதியம் மேலகல்கண்டார்கோட்டை கம்பி கேட் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் சூரஞ்சேரி பகுதியை சேர்ந்த காளிமுத்து(22), ராஜேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்த ராஜேந்திரன் இது குறித்து பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்

கஞ்சா விற்றவர் கைது

*திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சர்க்கார்பாளையத்தை சேர்ந்த ஜெகன், ராம்குமார் ஆகியோர் மீது கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

*திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கஞ்சா விற்றதாக எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த நந்தகுமாரை(22) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

*திருச்சி பீமநகரை சேர்ந்தவர் சதீஸ்(23). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

*திருச்சி கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம். இவருடைய மகன் கோகுல்நாத் (15). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு சென்ற கோகுல்நாத் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story