மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு கூட்டம்
மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு கூட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பாளரும், தலைமை ஆசிரியருமான ராஜன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை அல்லிராணி வரவேற்றார். ஆசிரியர்கள் கீதா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசும்போது, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தினை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்கு குறித்தும், பள்ளியின் முன்னேற்றத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது குறித்தும் எடுத்துக்கூறினர். பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு கூட்டத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தின் விரிவுரையாளர் அமுதா, பள்ளி மேலாண்மை குழுவின் தேவை குறித்தும், எதற்காக அவை கட்டமைக்கப்படுகின்றன என்பது குறித்தும் பேசினார்.
தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழுவிற்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அல்லிராணி நன்றி கூறினார்.