அரசு பெண்கள் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்


அரசு பெண்கள் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் குழு தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை (நவீன வசதிகளுடன் கூடிய பள்ளியாக)தரம் உயர்த்த ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, மேற்படி நிதியில் முதல் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ், ரூ.2 கோடியே 20 லட்சத்து 33 ஆயிரத்து 929 மதிப்பில் பள்ளியை புதுப்பித்தல், ரூ.57½ லட்சம் மதிப்பில் கணினி ஆய்வகம், பள்ளி கட்டிடம் சீரமைத்தல், வர்ணம் பூசுதல், ஆழ்துளை கிணறு, தீயணைப்பான் கருவி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெற்றோர், ஆசிரியர் கழக செயலாளர் சிவக்குமார், ஆசிரியர், உறுப்பினர் தமயந்தி, முதுகலை ஆசிரியர் முத்துகிருஷ்ணன், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அன்சர்அலி, நாராயணன், சுரேஷ், கோவிந்தராஜ், சசிகலா, காவியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story