தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
தேசூர் பேரூராட்சி பாடசாலை தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் அதன் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் மரிய பிரகாசம், பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளியின் முன்னேற்றம் மற்றும் இடைநிற்றல் மற்றும் மாணவருடைய பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் தேர்வினை சிறப்பாக எழுதுல் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிவில் ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்,
Related Tags :
Next Story