குமரமுடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு
குமரமுடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டியில் குமரமுடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. உலகம்பட்டி, புதுவாடி, ஆரணிப்பட்டி, படமிஞ்சி, கண்டியாநத்தம், முந்திரி காடன் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் ஆடுகளத்தில் துள்ளி குதித்து ஓடியது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டு காளைகளை அடக்கி பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். இதில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு சில்வர் அண்டா பரிசாக வழங்கப்பட்டது. உலகம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story