தடாகபுரீஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேக விழா
தடாகபுரீஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேக விழா நிறைவுபெற்றது.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
தடாகபுரீஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேக விாா நிறைவுபெற்றது.
சேத்துப்பட்டு தாலுகா மடம் கிராமத்தில், பிரகன் நாயகி சமேத தடாகபுரீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று நவ மூலிகை யாகம் வளர்க்கப்பட்டு 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது கோவில் வளாகத்தில் உள்ள 9சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் உச்சமூர்த்தியான பிரகல்நாயகி சமேத தடாகபுரீஸ்வரர் உற்சவர் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story