சுப்பையா சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம்


சுப்பையா சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம்
x

சுப்பையா சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே பொன்-அரியாண்டிபட்டியில் சுப்பையா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தேனிமலை ராஜப்பா குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு பூர்ணாஹுதி காண்பிக்கப்பட்டது. பின்னர் சுப்பையா சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சுவாமிக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பையா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பொன்- அரியாண்டிப்பட்டி, மெய்யக்கண்புரம் பங்காளிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story