ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்காக விவசாயிகளிடம் நிலஎடுப்பு முன்னறிவிப்பு ஆணை
ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்காக விவசாயிகளிடம் நிலஎடுப்பு முன்னறிவிப்பு ஆணை வழங்கப்பட்டது.
கடையம்:
தென்காசி மாவட்டம் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கான நில எடுப்பு முன்னறிவிப்பு ஆணையை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் நில எடுப்புக்கான முன்னறிவிப்பு ஆணையை வழங்கினார். கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வரவேற்றார்.
கடையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகேஷ் மாயவன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார், கீழப்பாவூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உதயசூரியன், கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் முத்து மாணிக்கம், நில எடுப்பு சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் அரிகரன், அண்ணாமலை, உதவியாளர்கள் பவுன்ராஜ், சுடலை கனி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலா் கலந்துகொண்டனர்.