கோடை வெயில் தாக்கத்தால் கருகும் மா பூக்கள்


கோடை வெயில் தாக்கத்தால் கருகும் மா பூக்கள்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடை வெயில் தாக்கத்தால் கருகும் மா பூக்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு, காட்டுச்சேரி, காழியப்பநல்லூர், பத்துக்கட்டு, ஆணைகக்கோவில், எருக்கட்டாஞ்சேரி, தில்லையாடி, கிடாரங்கொண்டான், கஞ்சா நகரம், செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர்,இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பல்வேறு வகையான மா மரங்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் செம்பனார்கோவில் வட்டார பகுதியில் மழை விட்டு விட்டு பெய்ததால் மா பூக்கள் உதிர்ந்தது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீதமுள்ள பூக்கள் கருக ஆரபித்து விட்டது. சாம்பல் நோய், தாக்குதல் ஆரம்பித்து விட்டது இதனால் மகசூல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.


Next Story