நத்தம் பகுதியில் மாங்காய் விளைச்சல்


நத்தம் பகுதியில் மாங்காய் விளைச்சல்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:30 AM IST (Updated: 17 Sept 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் பகுதியில் மாங்காய் விளைச்சல் அடைந்துள்ளது.

திண்டுக்கல்

நத்தம் பகுதியில் மாந்தோப்புகள் ஏராளமாக உள்ளன. இங்கு விளைச்சலாகும் மாங்காய் திண்டுக்கல் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள். இந்த நிலையில் கடந்த மே மாதம் 'மா' சீசன் முடிந்தது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக நத்தம் பகுதியில் பெய்த மழை காரணமாக மாமரங்களில் பூக்கள் அரும்பி மாங்காய் விளைச்சலானது. இந்த மாங்காய்கள் நத்தம் பகுதியில் உள்ள சந்தைகளில் தற்போது விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் கண்ணுமுகமது கூறுகையில், நத்தம் பகுதியில் கோடை மாங்காய் விளைச்சல் எப்போதாவது இருக்கும். அதன்படி தற்போது மாங்காய் விளைச்சலாகியுள்ளது. இதில் கல்லாமை ரக மாங்காய் அதிக அளவில் விளைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ கல்லாமை மாங்காய்க்கு ரூ.50 முதல் ரூ.70 வரை விலை கிடைக்கிறது. ஊறுகாய் பிரியர்கள் இந்த மாங்காய்களை வாங்கிச்செல்கின்றனர் என்றார்.


Next Story