விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதை


விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதை
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் வட்டாரத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் தேசிய எண்ணெய் வித்து இயக்க திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் மணிலா விதை வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோர் தலைமை தாங்கி 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மணிலா விதைகளை வழங்கி தொடங்கி வைத்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தற்போது பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் இருப்பில் உள்ள கோ.7, கதிரி லப்பாக்சி மற்றும் தரணி ஆகிய விதை ரகங்களை பெற்று பயன்பெறலாம் என்றனர். இதில் விருத்தாசலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜிவ்காந்தி, ரத்தினம், பிரகாஷ், சித்ராங்கி மற்றும் ரிச்சர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story