சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளதால் மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பதவி விலக வேண்டும்; என்.ஆர்.தனபாலன் பேட்டி


சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளதால் மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பதவி விலக வேண்டும்; என்.ஆர்.தனபாலன் பேட்டி
x

சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளதால் மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பதவி விலக வேண்டும்; என்.ஆர்.தனபாலன் பேட்டி

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

தமிழ்நாடு நாடார் பேரவை ஈரோடு வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட பவானிசாகர் ஒன்றியம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி நகர ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பவானிசாகர் அணை கட்டிய காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும். அதே போல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலும் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும். மணிப்பூர் மாநில கலவரம் இந்தியாவுக்கு தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. கலவரத்தை தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் இருப்பதால் அம்மாநில முதல்-மந்திரி பதவி விலக வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தி, கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் லட்சுமண குமார், பொருளாளர் கனகராஜ், பவானிசாகர் ஒன்றிய தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வடக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் வரவேற்று பேசினார். முடிவில் சேகர் நன்றி கூறினார்.


Next Story