மனித நேய வார விழா


மனித நேய வார விழா
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நடைபெற்றது. தொடக்க நாள் நிகழ்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடுமலை பள்ளி மாணவிகளின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், தனிதாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) கனிமொழி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகிற 30-ந் தேதி வரை மனித நேய வார விழா நடக்கிறது


Next Story