மானியத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்
குடிமங்கலம் வட்டாரத்தில் நடப்பு 2022-2023 ம் ஆண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களாக புக்குளம், கோட்டமங்கலம், கொண்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
இந்த 3 கிராமங்களில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ 75 ஆயிரம் மானியத்தில் வெங்காய சேமிப்புப்பட்டறை, ரூ 2 லட்சம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ்ராஜன் தலைமையில் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கோபிநாத் (குடிமங்கலம்), சுரேஷ் (மடத்துக்குளம்) ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story