சுற்றுப்புறத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு மஞ்சப்பை விருது - கலெக்டர் தகவல்


சுற்றுப்புறத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு மஞ்சப்பை விருது  - கலெக்டர் தகவல்
x

சுற்றுப்புறத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் என்று கலெக்டர் கூறினார்

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், 2022-2023-ம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளார்;. இதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்வகையில் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தங்கள் வளாகங்கள், மற்றும் சுற்றுப்புறங்களை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in, என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தனிநபர் நிறுவனத்தலைவர் கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு நகல்கள் மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டு எண்ணிக்கைகள் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த ஆண்டு மே 1-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story