பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மஞ்சப்பை


பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மஞ்சப்பை
x

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மஞ்சப்பையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மஞ்சப்பை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் இன்று நடந்தது.

வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். உதவிகமிஷனர் சுதா, மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், மாநகர நல அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார்கள்.

பின்னர், வேலூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அனைவரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் மண்ணிற்குள் புதைந்து அதன் தன்மையை கெடுத்து விடுகிறது.

மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக்கை தவிர்த்து அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் லூர்துசாமி, கவுன்சிலர் முருகன், வியாபாரிகள் சங்க தலைவர் ஞானவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story