மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி ஆண்டு விழா


மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி ஆண்டு விழா
x

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி ஆண்டு விழா

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத்தலைவர் ரவி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக கல்லூரி ஆங்கிலத்துறைத்தலைவர் மாறன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவு தேர்வுகளில் முதல், 2-ம் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் சத்தியாதேவி நன்றி கூறினார்.


Next Story