அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு


அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். குண்டடம் அருகே சூரியநல்லூர் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் சப்பை தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். வீதிகளில் தெருவிளக்கு வசதியில்லாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 4 டவுன் பஸ்கள் வந்தாலும் முல்லைநகர் பகுதியில் நிற்பதில்லை. எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Next Story