பழுதான மின் மோட்டார்களை சீரமைக்க ேகாரிக்கை


பழுதான மின் மோட்டார்களை சீரமைக்க ேகாரிக்கை
x

பள்ளப்பட்டி பகுதியில் பழுதான மின் மோட்டார்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

பள்ளப்பட்டி பகுதியில் பழுதான மின் மோட்டார்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளப்பட்டி கிராமம்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் முத்துராமலிங்கபுரம் காலனி, நேருகாலனி, விவேகானந்தர்காலனி, எம்.ஜி.ஆர். நகர், சிவகாந்திநகர், திருப்பதி நகர் உள்ளிட்ட பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் மோட்டார்கள் அதேபகுதியில் உள்ள கடம்பன்குளம் கண்மாயில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கண்மாயில் நீர் அதிகம் ஆனதை தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர்கள் மோட்டார் பயன்பாட்டை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வரை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. இந்தநிலையில் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை சரி செய்து அதன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

விரைவில் நடவடிக்கை

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, கண்மாய் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 4 மின் மோட்டார்கள் மற்றும் காமராஜர்புரம், லிங்கபுரம் காலனி ஆகிய பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்து வந்த மின் மோட்டார்களும் பழுதாகி உள்ளது.

சம்பந்தப்பட்ட ஊழியர்களுடன் கண்மாய் பகுதிக்கு சென்று பழுதான மோட்டார்களை ஆய்வு செய்தேன். இதுகுறித்து யூனியன் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று 15 நாட்களில் 7 மின் மோட்டார்களையும் சரி செய்து பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை எவ்வித பாதிப்பு இன்றி வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது பஞ்சாயத்து செயலர் லட்சுமணபெருமாள்சாமி உடனிருந்தார்.


Next Story