விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் பற்றி விளக்கி கூறும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பெரிய காய்கறி மார்க்கெட், ஆசிரியர் நகர், தூயெநஞ்சக் கல்லூரி, புதிய பஸ் நிலையம், புதுப்பேட்டை ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் தலைமை வகித்து, மனுஸ்மிருதி நூலில் கூறப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கூறி, பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி நூல்களை வழங்கினார். திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன், நகராட்சி கவுன்சிலர் வெற்றிகொண்டான், மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் கோகுல் அமர்நாத், நகர துணை செயலாளர் விஜயகுமார், வழக்கறிஞர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி திருப்பத்தூர் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story