"பல அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட கிடையாது" - வெளியான அதிர்ச்சி தகவல்


பல அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட கிடையாது - வெளியான அதிர்ச்சி தகவல்
x

பல அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

பள்ளிகள் திறக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் தொடக்கப்பள்ளி இயக்குநர் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி மேலாண்மை குழுவின் உதவியுடன் மாணவர் சேர்க்கை பேரணியை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

ஒரு மாணவரும் இல்லாத 22 பள்ளிகளில் 10 மாணவர்களை சேர்த்தால், 2 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள 669 பள்ளிகளில் இரட்டை இலக்கத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும் தொடக்க கல்வித்துறையில் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் உள்ள 31 ஆயிரத்து 336 பள்ளிகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும், 25 லட்சத்து 50 ஆயிரத்து 997 மாணவர்களும் படித்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story