வேலூரில் மாரத்தான் போட்டி


வேலூரில் மாரத்தான் போட்டி
x

வேலூரில் மாரத்தான் போட்டியை ஜி.வி.செல்வம் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூரில் மாரத்தான் போட்டியை ஜி.வி.செல்வம் தொடங்கி வைத்தார்.

ரோட்டரி கிளப் ஆப் வேலூர் போர்ட் மற்றும் ஆக்சீலியம் கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் டீ-சர்ட் மற்றும் பிஸ்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டன.

போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இதில் ரோட்டரி கிளப் செயலாளர் என்.வெங்கடேசன், சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story