பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா


பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா
x

மாசித்திருவிழாவையொட்டி பூப்பல்லக்கில் நத்தம் மாரியம்மன் வீதி உலா விடிய, விடிய நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா, கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி, 15 நாட்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர்.

திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட வண்ண பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்தார். அம்மன் குளத்தில் இருந்து மாரியம்மன் புறப்பாடாகி, 15-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விடிய, விடிய வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலையில் பூப்பல்லக்கில் அம்மன் கோவிலை போய் சேர்ந்தது. இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.


Next Story