மாரியம்மன் கோவில் குடமுழுக்கு


மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x

அனந்தமங்கலம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது

மயிலாடுதுறை

பொறையாறு

பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓடக்கரை மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹுதி போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து 4 கால பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை வலம் வந்தது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர், பிடாரி அம்மன், அய்யனார், காளியம்மன் ஆகிய தனி சன்னதியிலும் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.








Next Story