மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான தேர்வை 1999 பேர் எழுதினர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான தேர்வை 1999 பேர் எழுதினர்

கிராம உதவியாளர் தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி ஆகிய 4 தாலுகாவிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி திருப்பத்தூர் தாலுகாவில் 14 பணியிடங்களுக்கு 1,403 பேரும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 7 பணியிடங்களுக்கு 525 பேரும், வாணியம்பாடி தாலுகாவில் 3 பணியிடங்களுக்கு 406 பேரும், ஆம்பூர் தாலுகாவில் 7 பணியிடங்களுக்கு 456 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 790 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கான தேர்வு நேற்று அந்தந்த தாலுக்காவுக்கு உட்பட்ட தேர்வு மையங்களில் நடந்தது. 5-ம் வகுப்பு பாடத்திருந்து வினாக்கள் இடம் பெற்றிருந்தன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் காலை 7.30 மணி முதலே தேர்வு மையத்துக்கு வர தொடங்கினர். சில பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்தனர்.

அனைவரும் தீவிர சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தேர்வு நடைபெற்றதை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த தேர்வு மையத்தில் 1000 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 403 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. நாட்றம்பள்ளி வட்டத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில் 363 பேர் தேர்வு எழுதினர். 162 பேர் கலந்துகொள்ளவில்லை.

5-ம் வகுப்பு பாட கேள்விகள்

இதேபோல் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் 293 பேர் தேர்வு எழுதினர். 113 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் 343 பேர் தேர்வு எழுதினர். 113 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

மாவட்டத்தில் மொத்தம் 4 இடங்களில் நடந்த தேர்வுக்கு 2 ஆயிரத்து 790 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,999 பேர் தேர்வு எழுதினர். 791 பேர் தேர்வு எழுதல்லை.

தேர்வு எழுதியவர்கள் 71.64 சதவீதம் ஆகும். வராதவர்கள் 28.36 பேர் ஆகும்.

தேர்வு மையங்களை கலெக்டரை தவிர வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை கலெக்டர் கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) பானு, தாசில்தார்கள் சிவப்பிரகாசம், சம்பத், பழனி, குமார், மகாலட்சுமி ஆகியோரும் ஆய்வு ெசய்தனர்.


Next Story