மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

சங்கராபுரம் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டியந்தல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் பாரதம் படித்து தொடங்கியது. பின்னர் காப்புக்கட்டுதல், அம்மன் வீதியுலா, கரகாட்டம், காத்தவராயன் திருக்கல்யாணம், கழுமரம் ஏறுதல், காளிகோட்டை இடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மதியம் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story