மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

கல்லூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே கல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த தேர் பழுதடைந்த காரணத்தினால், கடந்த 7 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையல் கிராம மக்கள் சார்பில் 25 லட்சம் ரூபாய் செலவில் தேர் புதிதாக செய்யப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால், திருவிழா நடைபெறவில்லை.

தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதால், கோவில் திருவிழா வழக்கம் போல், கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story