'மெரினா உயிர் காக்கும் பிரிவு' - தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்
மெரினா கடற்கரையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு ‘மெரினா உயிர் காக்கும் பிரிவு’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை,
மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கடலில் குளிக்க செல்லும் போது சில சமயங்களில் அலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 'மெரினா உயி காக்கும் பிரிவு' உருவாக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகளில் யாரேனும் சிக்கிக் கொண்டால், உடனடியாக அவர்களை காப்பாற்றிக் கொண்டு வருவதற்காக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை உருவாக்குவதற்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்திருந்தார்.
அதன்படி கடந்த ஓராண்டு காலமாக இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று மெரினா கடற்கரையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு 'மெரினா கடற்கரை பிரிவு' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர், கடலோர காவல் படை அதிகாரிகள், இந்திய கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.