முள்ளுக்குறிச்சி, மெட்டாலா சந்தைகளில் பலா, அன்னாசி பழங்கள் விற்பனை அதிகரிப்பு

முள்ளுக்குறிச்சி, மெட்டாலா சந்தைகளில்  பலா, அன்னாசி பழங்கள் விற்பனை அதிகரிப்பு
x

முள்ளுக்குறிச்சி, மெட்டாலா சந்தைகளில் பலா, அன்னாசி பழங்கள் விற்பனை அதிகரிப்பு

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தற்போது பலாப்பழம், அன்னாசி பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. கொல்லிமலை பலாப்பழத்துக்கு தனி சுவை உண்டு என்று கூறப்படுவதால் மலைவாழ் விவசாயிகள் அதிகளவில் பலாப்பழங்களை முள்ளுக்குறிச்சி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விளைச்சல் அதிகரிப்பால் தற்போது முள்ளுக்குறிச்சி, மெட்டாலா சந்தைக்கு பலாப்பழம் மற்றும் அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து பலாப்பழம் மற்றும் அன்னாசி பழங்களை மொத்தமாக வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. ஆடி மாதம் வரை விளைச்சல் இருக்கும் என்று மலைவாழ் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் சந்ைதகளில் விற்பனை சூடுபிடித்துள்ளதால் கொல்லிமலை மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story