கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.87 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.87 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.87 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கரும்பு விவசாயிகள் 3 ஆயிரத்து 649 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ரூ.87 லட்சம்
இதில் 60 கிலோ மூட்டை கொண்ட முதல் தர நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 600-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 620-க்கும் விற்பனை ஆனது. மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 480-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 590-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 900 மூட்டை நாட்டு சர்க்கரை மட்டும் ரூ.87 லட்சத்து 8 ஆயிரத்து 290-க்கு ஏலம் போனது. இந்த நாட்டு சர்க்கரை பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டது.