அந்தியூரில் ரூ.32¾ லட்சத்துக்கு துவரை விற்பனை
அந்தியூரில் ரூ.32¾ லட்சத்துக்கு துவரை விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர்
அந்தியூரில் ரூ.32¾ லட்சத்துக்கு துவரை விற்பனை செய்யப்பட்டது.
தேங்காய்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் 2164 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இது ஒரு கிலோ 19 ரூபாய் 71 காசு முதல் 28 ரூபாய் ஒரு காசு வரை ஏலம் போனது, மொத்தம் 28 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் 46 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக 6 ஆயிரத்து 117 ரூபாயிலிருந்து 8 ஆயிரத்து 317 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 231 ரூபாய்க்கு விற்பனையானது.
கொள்ளு
கொள்ளு 5 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக 5 ஆயிரத்து 429 ரூபாயில் இருந்து 6 ஆயிரத்து 739 வரை ஏலம் போனது. மொத்தம் 18 ஆயிரத்து 627 ரூபாய்க்கு விற்பனையானது.
துவரை 643 மூட்டைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் 5 ஆயிரத்து 419 ரூபாயில் இருந்து, 7 ஆயிரத்து 310 ரூபாய் வரை ஏலம் போனது.
மொத்தம் 32 லட்சத்து 78 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையானது.
உளுந்து 7 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 6 ஆயிரத்து 65 ரூபாயில் இருந்து அதிகபட்ச விலையாக 6 ஆயிரத்து 505 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் 31 ஆயிரத்து 27 ரூபாய்க்கு விற்பனையானது.
தட்டைப்பயிர்
தட்ைடப்பயிர் 4 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 63 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 83 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 8 ஆயிரத்து 526 ரூபாய்க்கு விற்பனையானது.
பாசிப்பயிர் 3 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 8 ஆயிரத்து 869 காசுக்கும், அதிக பட்ச விலையாக 102 ரூபாய் 29 காசுக்கும் ஏலம் போனது. அவரை மொத்தம் 9 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையானது.
நரிப்பயிர்
நரிப்பயிர் 11 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக 9 ஆயிரத்து 469 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 9 ஆயிரத்து 689 ரூபாய்க்கும் ஏலம் போனது.
மொத்தம் 66 ஆயிரத்து 895 ரூபாய்க்கு நரிப்பயிர் விற்பனையானது.
விவசாய விளைபொருட்கள் மொத்தம் 35 லட்சத்து 65 ஆயிரத்து 473 ரூபாய்க்கு விற்பனையானது.