அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், கோவிலூர், ஒலகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,591 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 689-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 379-க்கும் என மொத்தம் ரூ.40 லட்சத்து 64 ஆயிரத்து 308-க்கு விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story