மார்க்கெட் நிறுவனர் தினம் அனுசரிப்பு
பாவூர்சத்திரம் மார்க்கெட் நிறுவனர் தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நிறுவனர் எம்.எஸ்.பி.வி. பெரியணன் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மார்க்கெட் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு மார்க்கெட் கமிட்டி தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் கே.நாராயண சிங்கம் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கமிட்டி நிர்வாகிகள் அருணோதயம், எஸ்.ஆர். சுப்பிரமணியன், கே.பி.குமார் பாண்டியன், கே.பி.முருகேசன், கோல்டன் செல்வராஜ், எஸ்.கே.டி.பி.காமராஜ், எஸ்.பி.கே.கண்ணன், கே.எம்.பெரியசாமி, காளிமுத்து, செந்தில்குமார், விக்னேஷ் குமார், பூபதி, செந்தூர் பாண்டியன், காளியப்பன், ஜெயராஜ் மற்றும் கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story