பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. மே மாதம் 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 802 பேரில், 19 ஆயிரத்து 505 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன் பின்னர் மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேர விண்ணப்பிப்பதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிச் சென்றனர்.
Related Tags :
Next Story