போதையில் ரகளை செய்த வாலிபர் மர்மச்சாவு
திருப்பத்தூரில் போதையில் தகராறு செய்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரை, அவரது தம்பி தாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதையில் தகராறு
திருப்பத்தூர் டவுன், ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசிப் (வயது 48). இவரது மகன்கள் அசரத் (22), ரியாஸ் (20). இருவரும் பெயிண்டராக வேலைபார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அசரத் அங்குள்ளவர்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவரை, தம்பி ரியாஸ் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் கோபமடைந்த ரியாஸ் தனது அண்ணன் அஸ்ரத்தை கட்டையால் தலைல் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி கீழே விழுந்து உள்ளார். அவரை வீட்டுக்குள் இழுத்து சென்று படுக்க வைத்துள்ளனர்.
தம்பி தாக்கியதில் இறந்தாரா?
காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சென்று அஸ்ரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் அஸ்ரத் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா?, அல்லது அவரது தம்பி ரியாஸ் தலையில் அடித்ததால் உயிரிழந்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என தெரிவித்தனர்.