திருத்தளிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
திருத்தளிநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. 7-ம் நாள் விழாவான நேற்று காலை 9 மணிக்கு திருமுருகன் திருப்பேரவையில் இருந்து திருமணத்திற்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதினர். பின்னர் சுப்பிரமணியசாமியும், தெய்வானை அம்பாளும் மண்டபத்தில் திருமணக்கோலத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து 9.45 மணிக்கு சுப்பிரமணிய சாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை பாஸ்கர குருக்கள், ரமேஷ் குருக்கள் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெண்களுக்கு பூ, மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு கோவிலில் திருமண விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.