ஒரேநாளில் 10 ஜோடிகளுக்கு திருமணம்


ஒரேநாளில் 10 ஜோடிகளுக்கு திருமணம்
x

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஒரேநாளில் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

வேலூர்

வேலூர்

வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வேலூரை சேர்ந்த பலர் திருமணம் செய்வார்கள். அதன்படி வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடைபெற்றது.

அருகருகே ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பரபரப்பாக இருந்தது. மேலும் கார், வேன், பஸ், ஆட்டோக்களில் உறவினர்கள் திருமணத்துக்கு வருகை தந்து வாழ்த்தினர். இதனால் கோட்டை வளாகத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story