ஏழை மணமக்களுக்கு திருமணம்


ஏழை மணமக்களுக்கு திருமணம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ஏழை மணமக்களுக்கு திருமணத்தை ராஜா எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் ஏழை மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவேங்கடத்தைச் சேர்ந்த சின்னராஜா- நெல்லையைச் சேர்ந்த ஐஸ்வர்யா மணமக்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.



Next Story