வரிபாக்கியை செலுத்தாததால் திருமண மண்டபம், 5 கடைகளுக்கு சீல்
விழுப்புரம் நகராட்சியில் வரிபாக்கியை செலுத்தாததால் திருமண மண்டபம், 5 கடைகளுக்கு சீல்
விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள திருமண மண்டபம், கடைகள், தனியார் நிறுவனங்கள், இயங்கி வருகின்றன. இவை விழுப்புரம் நகராட்சிக்கு ரூ.25 கோடி 80 லட்சம் வரிபாக்கி நிலுவையில் வைத்துள்ளன. இதை வசூல் செய்ய விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா நகராட்சி வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் அதிகாரிகள் நேற்று வரிபாக்கியை வசூலித்தனர். இதில் வரிபாக்கியை செலுத்தாத திருமண மண்டபம் மற்றும் கடைகளுக்கு சீல் வைத்தனர். சென்னை-சாலையில் உள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளர் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரி பாக்கி வைத்திருந்ததால் அந்த மண்டபத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் காமராஜர் தெரு, எம்.ஜி.சாலை, புதிய பஸ் நிலையம், சாலமேடு உள்ளிட்ட பகுதிக்கு சென்று வரிபாக்கியை செலுத்தாத 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.