அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி


அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புறாக்கிராமம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

தமிழக பள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு 3 மாத கால தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலை வகிதத்தார். டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் பாண்டியன், வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். இதேபோல் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


Next Story