தியாகிகள் நினைவு ஜோதி பயண வரவேற்பு கூட்டம்
தியாகிகள் நினைவு ஜோதி பயண வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.
வேலூர்
இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு. சார்பில் 15-வது மாநில மாநாடு நாகர்கோவிலில் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தியாகிகள் நினைவு ஜோதி வேலூருக்கு வந்தது. வேலூர் காமராஜர் சிலை அருகே ஜோதியை ஊர்வலமாக மண்டித்தெருவுக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு மண்டிவீதியில் ஜோதி பயண வரவேற்பு கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில துணை தலைவர் சங்கரி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story