நாகலாபுரம் அரசு கல்லூரியில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி


நாகலாபுரம் அரசு கல்லூரியில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி
x

நாகலாபுரம் அரசு கல்லூரியில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை போற்றும் வகையில், அவர்களின் அரிய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்று தொகுப்பினை மாணவர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த சிறப்பு கண்காட்சியை நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் மற்றும் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த தேச தலைவர்களின் தொகுப்புகளை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின் இதில் மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்த சிறப்பு சுதந்திர போராட்ட தியாகிகளின் கண்காட்சி நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் சாந்தகுமாரி, தூத்துக்குடி மாவட்ட இல்லம் தேடி கல்வியை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலைமுத்து, கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள் கல்லூரி மாணவ - மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story