மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க.வினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜபாளையம் நகர குழு சார்பில் ஆர்ப்பாட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், சாராள், மாவட்ட நிர்வாகிகள் கணேசன், நீராத்திலிங்கம், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செந்தமிழ் செல்வன், ஜெகன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல சாத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பெத்தராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரோஜா முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமி, விஜயகுமார், தெய்வானை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story