மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்ரீதர், முருகதாஸ், ராமலிங்கம், சிலம்பரசன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், நீலப் புலிகள் இயக்க தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த திருச்சியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணா, மேலாளர் நரேந்தர் ஆகிய இருவருக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேர வேண்டிய தொகை திரும்ப கிடைக்கும் வரை ஜாமீன் வழங்கக் கூடாது, திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நீதிமன்ற மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கும்பகோணம் கோர்ட்டு ரவுண்டானா பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட போராட்டக்காரர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் கோரிக்கைகளை மனுவாக கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் வழங்கினர்.