மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பிரகலாநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், பாரி, ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை நகர பஸ் நிலையத்தில் கழிப்பறை பயன்படுத்த ரூ.10 வசூலிப்பதை கண்டித்தும், இலவச கழிப்பறையை சுத்தமாக வைத்து தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துவரி பலமடங்கு உயர்த்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story