மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொறையாறு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இலுப்பூர், உத்திரங்குடி, எரவாஞ்சேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இலுப்பூர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர் காபிரியேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் குணசேகரன், கணேசன் ஆகியோர் பேசினர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிராமப்புற உட்புற சாலைகளை செப்பனிட வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story