மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரி உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கல்:
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை அருகே சிக்கல் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் விமலா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ஜோதிபாசு மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்
அரிசி கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீது மத்திய அரசு ஜி.எஸ்.டி.வரி உயர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் கீழ்வேளூர் தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் தலைமை தாங்கினார். இதில் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுபா தேவி, துரைராஜ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
தகட்டூர்
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் தபால் நிலையம் முன்பு மாவட்ட குழுவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, ஒன்றிய குழுவைச் சேர்ந்த இளையபெருமாள், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல கீழையூர் தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் சித்தார்த்தன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திட்டச்சேரி
திட்டச்சேரி தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை மாலி எம்.எல்.ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் லெனின்,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.