மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி, வரி உயர்வை கண்டித்து திருப்பூண்டி தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்அஜிஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உமாநாத், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story