மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அம்மாப்பேட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புத்தூர், நடுப்பட்டி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், மாவட்ட குழு உறுப்பினர் மாலதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே.கே.சேகர், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தூர்-நடுப்பட்டி கிராம மயானத்திற்கு சாலை அமைத்து தர வேண்டும். நடுப்பட்டி கீழத்தெரு சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும். புத்தூர்-நடுப்பட்டி மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.Next Story