மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், மாரியப்பன், சிம்சன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story